இவ்வருட இறுதியில் யாழ் விமான சேவைகள்!!

 


வருட இறுதிக்குள் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சேவைகளை ஆரம்ப்பிக்க  எதிர்பாப்பதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர தெரிவித்தார்.

யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றுக்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்துள்ளார்.

இதன்போது கருத்து தொிவித்த அமைச்சர் , யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்த வருடத்தின் இறுதிக்குள் சேவைகள் ஆரம்பிக்கும் எனவும், விமான சேவைகளை மீள ஆரம்பிப்பதற்கு இந்தியா தடையாக இல்லை எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

பெரும் வருமானத்தை ஈட்டிதந்த காங்கேசன் துறைமுகம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக அழிவடைந்து தற்பொழுது பயன்பாட்டில் இல்லை இவற்றின் மூலமே எமது நாடுபொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.

அந்த பொருளாதார நெருக்கடியில் மீள காங்கேசன்துறை போன்ற பொருளாதாரத்தை ஈட்டக்கூடிய இடங்களை நாங்கள் மீள புதுப்பித்து அவற்றை செயல்படுத்துவதன் மூலமே நாட்டுக்கு வருமானம் கிடைக்கும்.

இந்நிலையில் மிக விரைவில் காங்கேசன்துறை துறைமுகத்தினை செயற்படுத்துவதற்கு நாங்கள் முனைகின்றோம்.


அதேபோல் பலாலி சர் வதேச விமான நிலையமும் நமக்கு ஒரு வருமானத்தை ஈட்டக்கூடிய ஒரு விமான நிலையம் ஆகும் அந்த விமான நிலையமும் ஓரிரு மாதங்களில் விரைவில் செயற்படுத்தப்படும்.

அதேவேளை இந்தியா தான் அந்த விமான நிலையத்தினை செயல்படுத்துவதற்கு தடையாக இருப்பதாக வெளியான தகவல் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் வினவியபோது முதலில் அவ்வாறு பிரச்சனை இருந்தது ஆனால் சமரச முயற்சியில் ஈடுபட்டு தற்பொழுது எல்லா விடயங்களும் நிறைவடைந்து விட்டன என்றார்.     

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.