முள்ளிவாய்க்கால்’ இலிருந்து நாம் மன அளவிலும், கருத்தியல்!


 தோல்வியையும், அவலத்தையும் முன்னிறுத்தும் அரசியல் எம்மை ஒருபோதும் நீதியை நோக்கி நகர்த்தாது. அத்தோடு அது ஒரு எதிர்ப்பு அரசியல் வடிவமாகவும் உருத் திரளாது. தோல்வி மனநிலையிலிருந்து எந்த அரசியலும் செய்ய முடியாது – எந்த போராட்டத்தையும் வடிவமைக்க முடியாது – எதிரியுடன் எந்த பேரமும் பேசவும் முடியாது. நாம் பத்து வருடங்களாகத் தேங்கியிருப்பதற்கான முதன்மைக் காரணம் இதுதான்.


நந்திக்கடலின் மிக முக்கியமான இடித்துரைப்பு இது.


 எனவே தோல்வி மனநிலையிலிருந்து வெளியே வருவது முக்கியம். அதற்கு உள்ளக – வெளியக எதிரிகள் கூட்டாக இணைந்து உருவாக்கிய தோல்வியின், வீழ்ச்சியின், அழிவின் குறியீடான ‘முள்ளிவாய்க்கால்’ இலிருந்து நாம் மன அளவிலும், கருத்தியல்ரீதியாகவும் வெளியே வர வேண்டும். இன அழிப்பு என்று வரும் போதே நாம் ‘முள்ளிவாய்க்கால்’ என்ற பெயரை உச்சரிக்க வேண்டும். மற்றபடி நாம் என்றும் விடாது உச்சரிக்க வேண்டிய குறியீட்டு சொல் ‘நந்திக்கடல்’. 


இதுவே எம்மை தோல்வி மனநிலையிலிருந்து மீட்டெடுத்து ஒரு எதிர்ப்பு அரசியல் வடிவத்திற்குள் கொண்டுவரும் முதற் படிமுறையாகும்.


#நந்திக்கடல் கோட்பாட்டுருவாக்கச் சிந்தனைப் பள்ளி

#நவம்பர் 26 & 27

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.