மூன்று மடங்காக விலை உயர்ந்துள்ள பாடசாலை உபகரணங்கள்!!

 


பாடசாலை மாணவர்களுக்கான உபகரணங்களின் விலைகள் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாக விற்பனை செய்யும் மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.


80 பக்கங்கள் கொண்ட ஒற்றை ரூல் கொப்பியின் விலை முன்பு 55ரூபாய், தற்போது 145 ரூபாய். 


180 பக்கங்கள் கொண்ட கொப்பியின் விலை 270 ரூபாய். 


80 பக்க சிஆர் புத்தகத்தின் விலை ரூ.160ல் இருந்து ரூ.320 ஆக அதிகரித்துள்ளது.


10ரூ.வாக விலையில் இருந்த அழிரப்பர் தற்போது ரூ.40. 


பேஸ்டல்(கலர்) பெட்டியின் விலை ரூ.70ல் இருந்து ரூ.195 ஆக அதிகரித்துள்ளது.


10 ரூபாயாக இருந்த பேனாவின் விலை 30 ரூபாயாகவும், 


ஏ4 ஷீட் 10 ரூபாயில் இருந்து 100 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.


அதன்படி, புத்தகங்களின் விலை, பக்க அளவைப் பொறுத்து, 100 ரூபாவிற்கு மேல் அதிகரித்துள்ளது. 


மேலும் 1500 ரூபாவாக இருந்த ஒரு ஜோடி காலணி தற்போது 3000 ரூபாவை தாண்டியுள்ளது.


இதேவேளை, பாடசாலை பை ஒன்றின் விலையும் 1,000 ரூபாவில் இருந்து 3,000 ரூபாவாக  அதிகரித்துள்ளது என மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.