இலங்கை மக்களுக்கான அதிர்ச்சித் தகவல்!!இலங்கை அரசு தனது செயற்பாடுகளை நடத்துவதற்கு தினமும் 1050 கோடி ரூபாவை கடனாகப் பெற வேண்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல இதனை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,

இந்த ஆண்டு அரசின் வருமானம் 653 கோடியாகும். அரசின் செலவு 1705 கோடியாகும். இதேவேளை, வரவு செலவுத் திட்ட ஆவணத்தின்படி அடுத்த ஆண்டு அரசாங்கத்தின் வருமானம் 950 கோடி ரூபாவாக இருக்கும்.

அடுத்த வருடத்தில் அரசாங்கத்தின் செலவு 2160 கோடி ரூபாவாக அதிகரிக்கும். வரி வசூல் அதிகரிப்பால் அடுத்த ஆண்டு அரசின் வருமானம் அதிகரிக்கும்.

அதேவேளை அடுத்த ஆண்டு ஒரு நாளில் அரசாங்கத்தின் கடன் தொகை 1364 கோடியாக அதிகரிக்கும்.

அரசாங்கத்தின் வருமானத்திற்கும் செலவினத்திற்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருவதாகவும், நிதிக் கொள்கை எவ்வாறு தவறான திசையில் செல்கிறது என்பதை இது காட்டுகின்றது.

இதேவேளை, இவ்வருடம் நாளொன்றுக்கு ஒரு நபருக்கு அரசாங்கம் எடுத்த கடன் தொகை 473 ரூபாவாகும். கடந்த ஆண்டு இது 371 ரூபாயாக இருந்தது.அடுத்த வருடம் ஒரு நபருக்கு அரசாங்கம் சுமத்தும் கடன் தொகை அறுநூற்று ஒன்பது ரூபாயாக அதிகரிக்கும் என பேராசிரியர் மேலும் தெரிவித்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.