பிரபல தொழிலதிபர் ஒருவர் தற்கொலை

 


பிரபல தொழிலதிபர் ஒருவர் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


கண்டி பல்லேகல பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகரான மங்கள குணவர்தன என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

திகன பிரதேசத்தில் உள்ள மூன்று மாடி கட்டிடத்தில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் இன்று பிற்பகல் அவர் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திகன மங்கள என அழைக்கப்படும் வர்த்தகரான இவர், வாகன விற்பனை மற்றும் அடகு மையம் ஒன்றை நடாத்தி வந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த வர்த்தகர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

தற்கொலைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என்பதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.