15 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய 22 வயது இளைஞன்!

 


15 வயது சிறுமியுடன் குடும்பமாக வாழ்ந்து வந்த 22 வயதான இளைஞன் வட்டுக் கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.


வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இளைஞன் ஒருவர், சிறுமி ஒருவரை அழைத்து வந்து குடும்பமாக வாழ்கின்றார் என பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இளைஞன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த சிறுமி தற்போது மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.