இலங்கைத்தமிழர் முகாமில் பெண் தற்கொலை- அதிர்ச்சியளிக்கும் காரணம்!!

 


இலங்கை தமிழ் பெண் ஒருவர் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, 


கரூர் தாந்தோன்றிமலை அருகே, இலங்கை தமிழர் முகாமைச் சேர்ந்தவர் தர்மராஜேஸ்வரன். இவரது மனைவி யோகலதா (36).


 தர்மராஜேஸ்வரன் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்ததால் கணவன், மனைவி இடையே குடும்பதகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்து காணப்பட்டார் யோகலதா.


இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் யோகலதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வந்த புகாரின் பேரில் தான்தோன்றிமலை பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


விசாரணை முடிவில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomboகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.