மகளை கவனிக்க ஐடியில் பெரிய பதவியைத் தூக்கியெறிந்த அப்பா!

 


தனது குழந்தையை கவனித்து கொள்ள தந்தை ஐடி வேலையை விட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



மும்பையைச் சேர்ந்தவர் அன்கித் ஜோஷி. இவர் தனியார் ஐடி நிறுவனத்தில் Senior Vice President ஆக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஆகான்ஷா. இவர்களுக்கு ஸ்பிட்டி என்ற பெண் குழந்தை உள்ளது. இதில், குழந்தை பிறந்தபோது அன்கித்திற்கு அவரது நிறுவனத்தில் Paternity Leave ஆக ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டது.


ஆனால், குழந்தையுடன் நேரம் செலவிட அது அவருக்கு போதாது என முன்னரே அவருக்கு தோன்றியுள்ளது. மேலும் அவர் வேலை நிமித்தமாக பல ஊர்களுக்கு பயணம் செய்ய வேண்டியிருந்துள்ளது. “இப்படி டிராவல் செய்வது எனக்கு பிடிக்கும் என்றாலும், என் மகள் பிறந்த பிறகு எனக்கு இதிலிருந்து நீண்ட இடைவெளி தேவைப்படும் என தோன்றியது.


நிறுவனம் இதை ஏற்காது என்பதால், நான் வேலையை விட முடிவு செய்தேன். தற்போது 6 மாத Maternity Leaveல் இருக்கும் அவரது மனைவிக்கு மேலாளராக பதவி உயர்வு கிடைத்துள்ளது. ”ஒரு தாயாகவும், அவரது பணியிலும் சிறந்து விளங்குவது மன நிறைவாக இருக்கிறது.


இந்தியாவில் நிறுவனங்கள் புதிதாக குழந்தை பிறந்த ஆண்களுக்கு அளிக்கும் இந்த குறுகிய கால Paternity Leave பயனற்றதாக இருக்கிறது. இந்த காலத்தில் தந்தைகளுக்கு குழந்தைகளுடன் செலவிடும் நேரம் குறைவாக தான் இருக்கும் எனவும்,


இது தந்தைகளுக்கும் குழந்தை வளர்ப்பில் சமமான பொறுப்பு இருக்கிறது என்பதையும் மறுக்கிறது. இதனால் நிறுவனங்கள் Paternity Leaveஐ நீட்டிக்கும் வழக்கத்தை அமல்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.

 Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.