157 குடும்பங்கள் கிளிநொச்சியில் பாதிப்பு!!

 


தற்போது நிலவி வருகின்ற மழையுடனான காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் 3 பிரதேசங்களில் அதாவது பச்சிலைப்பள்ளி ,கிராச்சி,கண்டாவளை ஆகிய 3 பிரதேச செயலக பிரிவினை உள்ளடக்கிய 50 குடும்பங்களைச் சேர்ந்த 157 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.


இது தற்போது இருக்கின்ற பாதிப்பு நிலைமை என கிளி.மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். கிளிநொச்சியில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,


இந்த மக்களுக்கான உலர் நிவாரணம் மற்றும் சமைத்த உணவுகள் வழங்குவதற்கான சுற்று விருப்பத்துக்கு அமைய நாங்கள் ,அவர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறோம்.


அந்தவகையில் தற்போது மழை தணிந்து இருக்கின்ற காரணத்தினால் அனர்த்த நிலைமை தணிவடைந்து இருக்கிறது. எங்கள் பிரதேசத்தில் இருக்கின்ற குளங்களின் நிலவரங்களின்படி கனகாம்பிகை குளத்தின் நீர் வடிந்தோடுகின்ற நிலைமை காணப்படுகிறது.


ஏனைய குளங்கள் இதுவரை கட்டுப்பாடான சூழ்நிலையில் காணப்படுகின்றன தற்போது மட்டுப்பாடான நிலைமையில் எங்கள் மாவட்டம் காணப்படுகின்றது. இந்த காலநிலையினால் ஏற்படக்கூடிய வெள்ள நிலைமையினால் ஏற்படும் அனர்த்தங்கள் நிமித்தம் உதவி செய்வதற்காக நாங்கள் ஏற்கனவே எங்களுடைய மாவட்டத்தில் ஒரு முன்னாயத்த கூட்டத்தினை நடாத்தியிருக்கிறோம்.



அந்தவகையில் ஏதாவதொரு அனர்த்தம் ஏற்படுகின்ற பொழுது அரசாங்கத்தின் உதவிகளுக்கு மேலதிகமாக அரச சார்பற்ற நிறுவனங்களுடைய உதவிகள் தேவைப்படுகின்ற பட்ஷத்தில் அவற்றை வழங்குவதற்காக இவை உதவி புரிவதற்கு தயாராக உள்ளன.இவர்களுடன் முப்படைகளும் கடமையாற்ற தயாராக உள்ளனர் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.