ஒரு அன்பு கணவனின் ஆசை கடிதம்!!28இல் நுழைந்தாய்..
68இல் பிரிந்தாய்.
40வருட தாம்பத்யம்..
அதிக கொஞ்சல்கள்,
கம்மி சண்டைகள்..
அணுசரித்துப் போவதில் மன்னி நீ.. என்னையும் தான் இருக்கச் சொன்னாய்..
நீ இருந்தவரையில் அப்படி நான் இல்லை..
பஞ்சாயத்து பண்ண நீ இருந்தாய்.
நீ இல்லாத இப்போது
அனுசரித்து மட்டும் தான்
போக வேண்டி இருக்கிறது.
Kitchenஇல் நடக்கும் யுத்தம்..
பாத்திரம் தேய்க்க big boss போல shift..
காபி சூடாக இல்லை என்று எத்தனை தடவை கோபப்பட்டு இருப்பேன்
இப்போது பிரச்சினைகள் எப்போதும் சூடாக இருப்பதால் காணாமல் போய் விட்டது காஃபி
நம் ரூமில் நடுஇரவில் A/c ஆஃப் ஆகிவிடுகிறது.
Hallஇல் தூங்கினால் என்ன என்று ஜாடை மாடையாக உபதேசம்.
அனாயாசமாக 25 பேருக்கு சமைப்பாயே..
அதில் சுவையாய்
மணமும் இருக்கும்
உன் மனமும் இருக்கும்
இன்று எனக்கு google சமையல் பிடிக்கவே இல்லை.
ஒரே ஒரு நாள் எனக்காக இறங்கி வருவாயா நீ
இதமாக உன் கை விரல்களை
கோர்த்து கொண்டு காதலோடு சில மணி நேரம் காலாற நடக்க ஆசை
எனக்குப் பிடித்ததில் நீ செய்யாமல் போனது ஓன்று தான்.
கண்தானம்.
என்னையும் தடுத்தாய்..
நீ சொன்ன காரணம் மண்ணுலகில் கண்தானம் செய்துவிட்டால் விண்ணுலகிற்கு நீங்கள் வரும்போது எப்படி அடையாளம் கண்டுபிடிப்பேன் என்று கூறினாயே..
உண்மைதான்.
முன்போல் இல்லை உடல்நிலை. எனக்கொரு இடம் முன்பதிவு செய்.. சந்திப்போம் விரைவில்.....
மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கலாம்
நமக்கே நமக்கான
வாழ்க்கையை
நமக்காக நாம் வாழ...


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.