இலங்கை மீள்வதென்பது மிகவும் கடினம் - கலாநிதி ரொஹான் பெத்தியகொட!!

 


இலங்கையின் பொருளாதார நெருக்கடி  நிலைமை பலமுறை திவாலாகிவிட்டதாக அறிவித்த ஆர்ஜென்டினாவைப் போல் இருக்கும் என்று சிங்கள கல்வியியலாளரான  கலாநிதி ரொஹான் பெத்தியகொட ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் 48வது பட்டமளிப்பு நிகழ்வின்போது தெரிவித்துள்ளார்.


கடந்த 20 ஆண்டுகளில், அர்ஜென்டினா ஒரு முறை அல்ல, ஒன்பது முறை திவால் என்று அறிவித்தது. ஆர்ஜென்டினா .100 ஆண்டுகளுக்கு முன்பு உலகின் 15வது பணக்கார நாடாக இருந்தது. சராசரியாக, ஆர்ஜென்டினியர்கள் இத்தாலியர்கள், பிரான்ஸ் மற்றும் ஐரிஷ் மக்களை விட பணக்காரர்களாக இருந்தனர்.


இன்று அது உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகும். எல்லாவற்றுக்கும் காரணம் அரசியல் சித்தாந்தத்தில் பொது அறிவு இல்லாமையே என்று ரொஹான் பெத்தியகொட குறிப்பிட்டார்.

எதிர்வரும் காலங்களில் இலங்கை மீண்டும் மீண்டும் திவாலாகிவிடக்கூடும் என்றும் எதிர்பார்க்கலாம் என்றும் 


இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடியிலிருந்து மீள்வது எளிதல்ல. ஓரிரு வருடங்களில் முடிந்துவிடப் போவதில்லை. இதற்கு பத்து அல்லது இருபது வருடங்கள் அல்லது ஒரு தலைமுறை ஆகலாம் என்றும் கலாநிதி ரொஹான் பெத்தியகொட .கூறியுள்ளார். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.