அதிரடி தீர்மானம்விடுத்த இலங்கை ஆசிரியர் சங்கம்!!

 


பாடசாலை ஆசிரியர்கள் வசதியான ஆடைகளை அணிந்து பணிக்கு சமுகமளிக்கும் உரிமையை பெற்றுக்கொடுக்க சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது.


விரைவில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.


பாடசாலை ஆசிரியர்களின் உடை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைக்குரிய நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


இதேவேளை ஆசிரியர்களின் ஆடைகள் விடயத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.