ஐநா எங்களை பொறுப்பேற்க வேண்டும்!
கனடா நோக்கி சென்று கொண்டிருந்த போது, வியட்நாம் கடற்பரப்பில் விபத்துக்கு உள்ளான கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்ப மறுப்பு தெரிவித்துள்ளனர்.
தங்களை கனடாவுக்குள் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த கப்பலில் இருந்து மீட்கப்பட்டவர்களில் 264 ஆண்கள், 19 பெண்கள் மற்றும் 20 குழந்தைகள் உள்ளனதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் வியட்நாம் அதிகாரிகளினால் இரண்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் பிபிசி ஊடகத்திற்கு தெரிவிக்கையில்,
”நாங்கள் வியட்நாம் அகதி முகாமில் இருக்கின்றோம். இலங்கையில் இருந்து வந்து நடுக்கடலில் தத்தளித்து கொண்டு இருந்தோம். எங்களை அழைத்து வந்தவன் எம்மை விட்டு விட்டு தப்பிச் சென்று விட்டான். நாங்கள் சர்வதேச கடலில் தத்தளித்த போது ஜப்பான் நாட்டு கப்பல் வந்து எங்களை காப்பாற்றியது. அவர்கள் எம்மை ஐக்கிய நாடுகள் சபையிடம் ஒப்படைக்க இருந்த போது, வியட்நாம் கடற்படை எம்மை அழைத்து வந்துள்ளது. எங்களை எப்படியாவது காப்பாற்றவும். எமக்கு இலங்கை வேண்டாம். இலங்கையில் இருக்க முடியாது என்று காரணத்தால்தான் நாங்கள் வந்தோம். இலங்கைக்கு எமது ஆண் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு போகவே முடியாது. ஆகவே, அரசாங்கம் மற்றைய அனைத்து நாடுகளும் இணைந்து எம்மை காப்பாற்றவும்”
கருத்துகள் இல்லை