வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கை!

 


தென் கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் காணப்படுகின்ற குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 36 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக்கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதுடன், அது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 20 ஆம் மற்றும் 21 ஆம் திகதிகளில் இலங்கையின் வடக்குக் கரையை அண்மித்ததாக தமிழ்நாட்டை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


(வளிமண்டலவியல் திணைக்களம்)

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.