இவர்கள்தான் Mr And Mrs சின்னத்திரை நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர்!!

 


விஜய் டிவியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்றாகும் Mr and Mrs சின்னத்திரை. இதனுடைய நான்காவது சீசன் தற்போது நடைபெற்று முடிந்துள்ளது.


நேற்று நடைபெற்ற இந்த பைனல் போட்டியில், ஒவ்வொரு ஜோடியும் கடுமையாகவே போட்டியிட்டனர்.இந்த பைனல் போட்டியில் கடுமையாக போட்டியிட்ட Mr and Mrs சின்னத்திரை சீசன் 4 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராகியுள்ளனர் மகாலிங்கம் - ராஜேஸ்வரி. அதுமட்டுமின்றி ரூ. 3 லட்சம் வெற்றி தொகையாகவும் வழங்கப்பட்டுள்ளது.


மஹாலிங்கம் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகர். அண்மையில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற சோழா சோழா பாடலை கூட இவர் தான் பாடியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும், மதன் - ரேஷ்மா ஜோடி இரண்டாவது இடத்தையும், ஃபரினா - ரஹ்மான் மற்றும் வசந்த் - ரேகா ஜோடிகள் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.