யாழ்ப்பாணத்தில் 14 வயது மாணவி குழந்தை பிரசவிப்பு – 73 வயது முதியவர் கைது

 


யாழ்ப்பாணத்தில் 14 வயது மாணவி ஒருவர் குழந்தையை பிரசவித்துள்ளார்.சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 73 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த முதியவர் சிறுமியுடன் நெருங்கி பழகினார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த முதியவர் சிறுமியின் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் 16 வயது மாணவி ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் 72 வயது முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பாதிப்புக்குள்ளான குறித்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.