2 கிலோ கஞ்சாவுடன் இரு சந்தேகநபர்கள் கைது!

 


கிளிநொச்சியில் 2 கிலோ கஞ்சாவுடன் இரு சந்தேகநபர்கள் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி 57வது படைப்பிரிவின் தலைமை கட்டளை அதிகாரி மற்றும் 573 வது படைகளின் கட்டளை அதிகாரி ஆகியோரின் வழிநடத்தலில், இராணுவ புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக விசேட அதிரடிப்படையினர் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது குறித்த 2 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விவேகானந்தா நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்று சோதனைக்குட்படுத்தப்பட்ட போது, குறித்த வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட கஞ்சா பொதி 2 கிலோ மதிக்கத்தக்கது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதன் போது, குறித்த வீட்டிலிருந்த ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் வழக்கு தொடரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.