போட்டியால் பேருந்து விபத்து!!

  


 

வவுனியாவில் தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டிறங்கியதில் விபத்திற்கு உள்ளாகியுள்ளது. 

இரண்டு பேருந்துகள் போட்டி போட்டு ஓடியதில் அவற்றில் ஓரு பேருந்து வீதியை விட்டுக் கீழிறங்கி விபத்துக்குள்ளானதாகத் தெரிய வந்துள்ளது.

  இன்று (17) காலை,  வவுனியா, மன்னார் பிரதான வீதியில் சாம்பல்தோட்டம் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகே  இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வவுனியாவிலிருந்து பூவரசங்குளம் வீதியூடாக செட்டிக்குளம் செல்லும் தனியார் பேருந்து ஒன்றும் வவுனியாவிலிருந்து மன்னார் செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் குறிப்பிட்ட இடத்திலிருந்து போட்டிபோட்டு ஒடியுள்ளன.

 தனியார் பேருந்துச் சாரதி கட்டுப்பாட்டை இழந்ததால் பேருந்து வீதியினை விட்டு கீழிறங்கி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் பயணிகளுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என்பதுடன் இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.