அடக்கம் செய்யப்பட்டது கிரிதரனின் சடலம்!!

 


கனடாவிற்கு சட்ட விரோதமாக படகின் மூலம் சென்ற நிலையில்  வியட்நாமில்    உயிரிழந்த  யாழ் கிரிதரனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இன்று அவரது இறுதிக்கிரியைகள் யாழ்ப்பாணத்தில் அமைத்துள்ள அவரது இல்லத்தில்  பலரின் கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்றது.

நாட்டிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் கனடா செல்ல முயற்சித்த 303 இலங்கையர்கள்  , படகு பழுதடைந்த நிலையில், கடந்த மாதம் 08 ஆம் திகதி   வியட்நாமிற்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

வியட்நாம் முகாமில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்ட நிலையில்  அவர்களில்  இருவர், தங்களை நாட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என தெரிவித்து  தற்கொலைக்கு முயற்சித்தனர்.

இதனையடுத்து இருவரும் வியட்நாமிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 37 வயதான சுந்தரலிங்கம் கிரிதரன் உயிரிழந்தார்.

உயிரிழந்த கிரிதரன் யாழ்ப்பாணம்  சாவகச்சேரி, கல்வயல் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். இதனையடுத்து  நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்ட  சுந்தரலிங்கம் கிரிதரனின் சடலம்,நேற்றைய தினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனையடுத்து , இன்றைய தினம் அவரின் இல்லத்தில் இறுதிக்கிரகைகள் இடம் பெற்று சாவகச்சேரி கண்ணாடிப்பெட்டி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் வறுமைக்கு தள்ளப்பட்ட  தனது குடும்பத்தை மீட்கவும், தனது பிள்ளை செல்வங்களின் எதிர்காலத்தை முன்னிட்டும் கனடா செல்ல  கிரிதரன் பயணமானதாக அவரது மனைவி கூறியிருந்தார்.

இந்நிலையில்  குடும்ப வறுமையை போக்கவென புறப்பட்ட கிரிதரனை இழந்த  குடும்பம் இன்று நிர்க்கதிக்கு தள்லப்பட்டுள்ளமை பெரும் துரரத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.