4 .பேரைத் திருமணம் செய்த மோசடிப் பெண்!!சென்னையில் 4 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண் தனது இரண்டாவது கணவருடன் பொலிஸில் பிடிபட்டுள்ள சம்வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மூத்த மகன் நடராஜன் என்பவர் ஒரு பேக்கரியில் வேலை செய்தபோது 28 வயதான அபிநயா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியுள்ளது.

இதனையடுத்து இருவருக்கும் சில மாதங்கள் முன்னதாக திருமணம் நடந்த நிலையில் சமீபத்தில் கணவருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக அபிநயா வீட்டில் இருந்த பணம், நகைகளை எடுத்து கொண்டு மாயமானார்.

இதுகுறித்து நடராஜன் வீட்டார் பொலிஸில் புகார் அளித்த நிலையில் 40 நாட்கள் கழித்து மகாபலிபுரசாலையில் உள்ள விடுதி ஒன்றில் அபிநயா பிடிப்பட்டுள்ளார். அத்துடன் அவருடன் வேறு ஒரு நபரும் இருந்துள்ளார்.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் அவர் அபிநயாவின் இரண்டாவது கணவர் என தெரிய வந்துள்ளது.

அதுமட்டுமல்லாது அபிநயா இதுவரை 4 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றியது தெரிய வந்துள்ளது, அதில் இரண்டாவது கணவரான செந்தில் குமாரோடு வாழ்ந்தபோது அவர்களுக்கு 8 வயதில் மகன் ஒருவனும் உள்ளார்.

அதேசமயம் நான்காவதாக திருமணம் செய்த நடராஜன் வீட்டிலிருந்து திருடிய நகைகளை விற்று அபிநயாவும், இரண்டாவது கணவவரும் செலவு செய்ததும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகின்றது.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomboகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.