இன்றைய உதவி வழங்கல்!!

 


Vettri Oli வானொலியினது 7வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அதன் நிவாகியினால், தெரிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட தொகையான முதியோருக்கு போர்வை மற்றும் உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.



இலண்டன் மாநகரில் இருந்து உலகமெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கும் வெற்றிஒலி ஆனது முற்று முழுதாக சேவையின் அடிப்படையில் கட்டண விளம்பரங்கள் இன்றி இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு இணைய வானொலியாகும்.



யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசமொன்றில் வறுமை நிலையில் இருக்கும் சில முதியவர்களுக்கு உலருணவுப் பொருட்களையும்
மழைக்காலத்தினைக் கருத்தில்கொண்டு போர்வைகளையும் வழங்கி வைத்துள்ளதை சமூக ஆர்வலர்கள் பாராட்டியுள்ளதுடன் வெற்றிஒலி மேலும் சிறப்புற இயங்க தமது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.



அத்தோடு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பத்து சகோதரி ஒருவர் மகனோடு வசித்துவருகிறார்.அவரின் வறிய குடும்ப நிலையின் காரணமாக சுயதொழில் வாய்ப்பாக பசுமாடொன்றும் வெற்றி ஒலி சார்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.



அதன் நிர்வாகி சகோதரர் முகுந்தன், கடந்த வருடமும் வெற்றி ஒலியின் மகிழ்வான பயணத்தில் 60 குடும்பங்களிற்கு உலருணவுப் பொருட்களை வழங்கி வைத்திருந்தார்.



உதவி பெற்றவர்கள் தமது நன்றியையும் வாழ்த்துகளையும் வெற்றிஒலிக்குத் தெரிவித்துள்ளனர்.

தகவல் - பிரபா அன்பு

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.