யாழ் - சென்னை விமானக் கட்டணங்கள்!!

 


யாழ். பலாலி விமான நிலையத்தில் இருந்து எதிர்வரும் 12ம் திகதி விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்கான பயணக் கட்டண விபரங்கள் வெளியாகியுள்ளன.

சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு 6700 இந்திய ரூபாவும் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு 9 200 இந்திய ரூபாவும் கட்டணமாக அறவிடப்படுகின்றது.

 ஒரு வழி பயணச்சீட்டு விபரமே இதுவாகும். அதேவேளை விமான பயணசீட்டு இருவழி பயண சீட்டும் ஒரே கட்டணமே வசூலிக்கப்படும் நிலையில் , யாழ்ப்பாணம்  - சென்னைக்கு போக ஒரு கட்டணமும் வர ஒரு கட்டணமும் வசூலிக்கப்படுகின்றது.

அதுமட்டுமல்லாது  யாழில் விமானநிலைய நுழைவுவரி 60 டொலர் ரிக்கற்றில் உள்ளடங்குகிறது. ஆனால் இந்தியாவில் விமானநிலைய நுழைவு வரி இல்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.