சீன பிரதிநிதிகள் யாழ். கோட்டையில்!!
யாழ்ப்பாணக் கோட்டைக்கு இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதிநிதிகள் குழுவினர் விஜயம் செய்து பார்வையிட்டனர்.
இன்று புதன்கிழமை மாலை 4 மணியளவில் இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதர் ஹு வெய், சீனத்தூதரக அரசியல் விவகார அதிகாரி லியோ சொங் உள்ளிட்ட மூவர் குழுவினரே வருகைதந்தனர்.
இந்நிலையில் குறித்த விஜயம் சுற்றுலா ரீதியானது என தெரிவிக்கப்படுகின்ற நிலையில் கோட்டை பொறுப்பான அலுவலர்களோ உத்தியோகஸ்தர்களோ பிரசன்னமாகி இருக்கவில்லை.
இதன்போது கோட்டை தொடர்பான விடயங்களை அங்கிருந்தவர்களிடம் கேட்டறிந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை