முகக்கவசம் அவசியம்!!

 


வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தூசுப்படிமம் காரணமாக எதிர்வரும் சில நாட்களுக்கும் முகக்கவசம் அணியுமாறு, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தூசுப் படிமங்கள் இன்றைய நாளில், பெரும்பாலும் குறைவடைந்து செல்லும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்தியாவிலிருந்து இலங்கை நோக்கி நகரும் காற்றின் மாசு அளவு, படிப்படியாக குறைவடையும் என புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. 

அத்துடன் வளிமண்டல மாசு நிலை விரைவில் நீங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அந்தப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

வளிமாசடைவை அளவிடும், வளித்தர சுட்டெண்ணின் அடிப்படையில் கொழும்பில் இன்றைய நாளில் காற்றின் தரம் 50 ஐ விடவும் குறைந்த சுட்டெண்ணாக பதிவாகியுள்ளது.

நேற்றைய நாளில், கொழும்பில் காற்றின் தரச் சுட்டெண் 181ஆக பதிவாகி இருந்தது.

இந்த நிலையில் நேற்றைய நாளில், அவதானம் மிக்க நிலையில் காணப்பட்ட சில மாவட்டங்களின் காற்றின் தரச் சுட்டெண், இன்றைய நாளில் ஏற்றுக்கொள்ளக்கூடிய தரத்திற்கு உயர்வடைந்துள்ளதாக தேசிய புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. 

சுற்றுப்புறக் காற்று தரம் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட அறிக்கையை அந்தப் பணியகம் வெளியிட்டுள்ளது.

பச்சை நிறத்தில் அடையாளப்படுத்தப்படும் 0 முதல் 50 வரையான காற்றின் தர சுட்டெண் நிலையானது, வளி மாசு மிகவும் குறைந்த மட்டத்தில் உள்ளது என்பதுடன், அவதானமற்ற நிலையாக கருதப்படுகிறது. 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.