நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி காலமானார்!


தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி திடீர் உடல்நலக்குறைவால் 67 வயதிலகாலமானார்.

தஞ்சை – பட்டுக்கோட்டை அடுத்துள்ள பொன்னவராயன் கோட்டையை சேர்ந்தவர் சிவநாராயண மூர்த்தி.
இவர் நடிகர் விசுவால் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகப்படுத்தப்பட்டார். இவருடைய முதல் படம் பூந்தோட்டம்.
பெரும்பாலும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலேயே நடித்துள்ள இவர், சிவாஜி, ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்களுடன் 218 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
விவேக், வடிவேலு காமெடிகளில் பிரபலமாக அறியப்பட்ட சிவநாராயண மூர்த்தி திடீர் உடல்நலக்குறைவால் காலமானார். இதனை எண்ணி திரையுக நடிகர் உட்பட பலரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.