7 இலங்கையர்களுக்கு நேர்ந்த நிலை!!

 


சட்டவிரோதமாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட 7 பேரையும், கடத்தலுக்கு தலைமை தாங்கிய வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளர் ஒருவரையும் கைது செய்ததாக கஹதுடுவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அஸர்பைஜான் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருமாறு கஹதுடுவ பிரகதி மாவத்தை பகுதியிலுள்ள வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் கூறியுள்ளார்.

அதற்கமைய, விமான நிலையத்திற்குச் சென்ற போது விசா இல்லை எனக் கூறி திருப்பி அனுப்பிய நிலையில், பாதிக்கப்பட்ட வெள்ளவத்தை பகுதியைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் இந்த மோசடி நடவடிக்கை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் செல்வதற்காக தான் 8 லட்சம் ரூபாயை வேலைவாய்ப்பு முகவருக்கு கொடுத்ததாக அவர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இவருடன் மேலும் 6 பேர் விமான நிலையத்திற்கு சென்ற போதிலும் அவர்களும் வெளிநாடு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பாதிக்கபட்ட நபர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து மேலும் 6 பேர் காவல்துறை நிலையத்திற்கு தாம் கஹதுடுவ வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு 62 லட்சம் ரூபாய் வழங்கியதாக குறிப்பிட்டுள்ளனர்.

வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்த போதும், வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளரால் தாம் விமான நிலையத்திற்குள் மாத்திரம் அழைத்துச் செல்லப்பட்டதாக அவர்கள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.