மக்களிடம் ஜனாதிபதி முன்வைத்துள்ள கோரிக்கை!!

 


இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் பேசுகையில்,

“இன, மத மற்றும் மக்களின் கவலைகளை கடந்த காலத்தை பின்தள்ளி போடுவதன் மூலம் 75ஆவது சுதந்திர தினத்தின்போதாவது நாடடின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் முயற்சிகளை தவிர்த்துக்கொள்ள முடியும்.

ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே கலந்துரையாடப்பட்டது போல நாட்டிலுள்ள சட்டத்தரணிகள் பங்களிப்புச் செய்தால் இந்த இலக்கை அடைய முடியும்.

இது எளிதானது இல்லையென்றபோதும் சாதிக்க முடியாதது என்பதில்லை. அத்துடன் அரசியல்வாதிகளால் மட்டும் இதனை சாதிக்க முடியாது. ஒட்டுமொத்த அமைப்பு முறையும் இளைய தலைமுறையினரால் கேள்விக்குட்படுத்தப்படும்போது நாம் அனைவரும் சவாலுக்கு உள்ளாக நேரிடுகிறது.

கடந்த கால காயங்களை ஆற்றுவதா அல்லது அதனை மேலும் வளரவிடுவதா என தீர்மானிப்பதற்கான சந்தர்ப்பம் தற்போது நாட்டுக்கு கிடைத்துள்ளது.

நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை சீர்குலைக்காமல் இன, மத வேறுபாடு மற்றும் மக்களின் சில எதார்த்தமான கவலைகளால் எழுந்துள்ள பிரச்னைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது தொடர்பில் ஆராய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

நாட்டிலுள்ள அனைத்து சட்டத்தரணிகளும் ஒன்று சேர்ந்தால் அனைத்து பாரிய பிரச்னைகளையும் பின்தள்ளிவிட்டு 75ஆவது சுதந்திர தின நிகழ்வின்போது நாம் அனைவரும் ஒரு தாய் மக்களாக முடியுமென்று” என்றார்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.