அறிமுகப்போட்டியில் அசத்திய டெண்டுல்கர் மகன்!

 


இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர், தனது அறிமுக ரஞ்சி கிண்ணப் போட்டியில் இன்று (14) சதம் குவித்து அசத்தியுள்ளார்.

கோவா அணி வீரான அர்ஜூன் டெண்டுல்கர், ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 207 பந்துகளில் 120 ஓட்டங்களைக் குவித்தார். இப்போட்டி கோவாவின் போர்வோரிம் நகரில் நடைபெறுகிறது.

23 வயதான அர்ஜூன் டெண்டுல்கர் விளையாடும் முதலாவது முதல்தரப் போட்டி இதுவாகும். இந்நிலையில் தனது அறிமுக முதல் தரப் போட்டியிலேயே அவர் சதம் குவித்துள்ளார்.

ஆர்ஜூன் டெண்டுல்கரின் தந்தையான சச்சின் டெண்டுல்கர், 1988 ஆம் ஆண்டு மும்பை அணி சார்பாக, குஜராத்துக்கு எதிரான தனது அறிமுக ரஞ்சி கிண்ணப் போட்டியில் 129 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களைப் பெற்றார்.

அதன் மூலம் அறிமுக முதல் தரப் போட்டியிலேயே சதம் குவித்தவரானார்  சச்சின் டெண்டுல்கர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.