தலிபான்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறது ஐ . நா!!

 


தலிபான் அரசாங்கம், அண்மையில், பெண்கள் அரச சாரா நிறுவனங்களில் பணிபுரிவதற்கும், பாடசாலை மற்றும் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கவும் தடை விதித்தது.ஆப்கானிஸ்தானில் பெண்கள் வன்முறைக்கு உள்ளாகும்


விதத்தில் தலிபான்கள் விதித்துள்ள   இவ்வாறான  கடுமையான சட்டங்களால் மனித உரிமைகள் மீறப்படுவதாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.


இதன்காரணமாக பெண்கள் வன்முறைக்கு உள்ளாவதாகவும் அவர்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டுமெனவும் பாதுகாப்புச் சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.


எவ்வாறாயினும், நாட்டில் நடைமுறையில் உள்ள இந்தச் சட்டங்களால், தலிபான்களுக்கு தாங்கள் எதிர்பார்க்கும் சர்வதேச அங்கீகாரம் கிடைக்காது என ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ் தெரிவித்துள்ளார்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.