பெப்ரவரி 4க்குள் தீர்வின்றேல் நல்லிணக்கம் சாத்தியமில்லை

 


பெப்ரவரி 4 ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினத்திற்கு முன்னர் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்காவிட்டால் அதன் பின்னர் அந்த தீர்வுக்கான சாத்தியமில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதனை தான் பெப்ரவரி 4 ஆம் திகதி பகிரங்கமாக அறிவிப்பேன் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

அனைத்து கட்சிகளுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகள் வடக்கு, கிழக்கில் காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோர் விவகாரம் ஆகியன தொடர்பில் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளன.

அத்துடன் அதிகார பகிர்வுடனான சமஷ்டியே தீர்வாக அமையும் என்பதனையும் தமிழ்க் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இதன்போது தெரிவித்துள்ள ஜனாதிபதி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் ஜனவரியில் மீண்டும் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்ப்பதாகவும், இதன்படி சுதந்திர தினத்திற்குள் தீர்வின்றோல் இனி நல்லிணக்கம் சாத்தியமாகாது என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.