சிவராஜ்குமார் , தனுஷுக்கு அண்ணனாகிறார்!!

 


சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில்  அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகிவருகிறது.  இந்தப் படத்துக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.


இதில் தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.


மேலும் இப்படத்தில் சந்தீப் கிஷான், நிவேதா சதிஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக செட் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.


அடுத்தகட்ட படப்பிடிப்பு எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி குற்றாலத்தில் ஆரம்பமாகிறது.


இந்தநிலையில், பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் தனுஷுடன் இப்படத்தில் இணைந்து நடிக்கவுள்ளார் என அண்மையல் தகவல் வெளியானது.


இந்நிலையில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் உரையாற்றிய சிவராஜ்குமாரஈ, இந்தப் படத்தில் தனுஷுக்கு அண்ணனாக நடிப்பதாக தெரிவித்துள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.