மீனவர் ஒருவர் மரணித்த நிலையில் சலடமாக மீட்பு!!
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இறாலோடையில் மரணித்த நிலையில் மீனவர் ஒருவரின் சடலம் இன்று (27) காலை தோணிக்கருகிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
இன்று அதிகாலை 2 மணியளவில் மீன்பிடிக்காக வீட்டிலிருந்த குறித்த மீனவர் சென்ற நிலையில் திடீர் மாரடைப்பினால் தோணி அருகிலேயே மரணித்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
மரணித்த நிலையில் காணப்பட்ட மீனவரை நேரில் கண்ட மற்றொரு மீனவர் குடும்பத்தாருக்கு தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து அவரது உடல் பொலிஸாரின் உத்தரவின் பேரில் பிரேத பரிசோதனைக்காக அகீல் அவசரப்பிரிவு வாகனத்தின் மூலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது டன், மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணமடைந்தவர் மாங்கேணி, காயங்கேணி, இறாலோடையைச் சேர்ந்த 64 வயதுடைய செல்லையா சிதம்பரப்பிள்ளை என்ற குடும்பஸ்தராகும்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை