200 சிறார்கள் இறப்பு!!

 


இந்தோனேசியாவில் 200 சிறார்கள் வரையில் திடீரென்று இறந்துள்ள நிலையில் இருமல் மருந்தில் கலப்படம் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதை அடுத்து பெற்றோர்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு


இந்தோனேசியாவில் இருமல் மருந்தை பயன்படுத்திய சிறார்களுக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டு, இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதையடுத்து, தொடர்புடைய இருமல் மருந்தை தடை செய்துள்ளனர்.


அந்த மருந்தை பயன்படுத்திய பின்னர் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, சிறுநீர் கழிக்க இயலாமை மற்றும் தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் காணப்பட்டதாக தெரியவந்துள்ளது.


இதுவரை 199 சிறார்கள் மரணமடைந்துள்ளதாக அரசு தரப்பு தகவல் வெளியிட்டுள்ள நிலையில், மேலும் 206 சிறார்கள் கண்காணிப்பில் இருப்பதாக சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.


திரவ மருந்துகள் வேண்டாம்


மேலும், தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு, தொடர்புடைய மருந்தை தடை செய்துள்ளதாகவும், ஆனால் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களும் நோயாளிகளுக்கு திரவ மருந்துகளை பரிந்துரை செய்ய வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளதாக அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.


மட்டுமின்றி, இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறார்கள் மற்றும் இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கவே வாய்ப்பு எனவும் அரசாங்கத்திடம் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கை இதுவெனவும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.


இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நான்கு இருமல் மருந்து காரணமாக காம்பியாவில் சிறுநீரக செயலிழப்பால் குழந்தைகள் இறப்பு பதிவான நிலையில் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.


இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை


குறித்த நான்கு வகை இருமல் மருந்தும் இந்தியாவில் ஒரே நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவையாகும். மேலும், கலப்படம் இருப்பதாக உறுதி செய்யப்பட்ட இருமல் மருந்துகள் காம்பியாவில் மட்டும் அடையாளம் காணப்பட்டதாகவும், ஆனால் வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு அக்டோபரில் கவலை தெரிவித்திருந்தது.


மட்டுமின்றி, தொடர்புடைய நிறுவனத்திடம் உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும், இந்தி சுகாதார அமைச்சகத்திடம் இது தொடர்பில் விளக்கம் கோரப்படும் எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


தொடர்புடைய மருந்து உங்களிடம் இருந்தால், கண்டிப்பாக அதை பயன்படுத்த வேண்டாம் எனவும் பெற்றோர்களுக்கு உலக சுகாதார அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.

 Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomboகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.