119 அவசர இலக்கத்துக்கு அழைத்த தாய் ஒருவரின் வித்தியாசமான முறைப்பாடு!!

 



அவசர அழைப்பு இலக்கத்தை தொடர்புகொண்ட தம்புள்ளை பிரதேச தாய் ஒருவர் , 3 ஆம் தரத்தில் கல்வி பயிலும், தமது மகன், தனக்கு விருப்பமான நேரத்தில் நித்திரைக்கு செல்லாமையால், குறித்து தகவல் வெளியாகியுள்ளது.


குறித்த தாய், அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தியிருந்தமையால், தம்புள்ளை பிரதேச காவல்துறை அதிகாரிகள் இருவர், நேற்றிரவு 9 மணியளவில், 15 கிலோமீற்றர் தொலைவிலுள்ள குறித்த வீட்டுக்கு சென்றுள்ளனர்.


இதன்போது, குறித்த தாய், தமது மகனை மாலை 6.30க்கு நித்திரைக்கு செல்லக் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.


அதேநேரம், காவல்துறையினர் அந்த இடத்திற்கு செல்வதற்கு, இரவு 9 மணியானமை குறித்து, குறித்த தாய் குறைகூறியுள்ளதாக தெரியவந்துள்ளது.


மகன் நித்திரைக்கு செல்லாமல், இரவு நேரம் வரையில், பல்வேறு வேலைகளை செய்துகொண்டிருக்கின்றமையால், தமக்கு, கணவருக்கும், ஏனைய பிள்ளைகளுக்கும் நித்திரைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குறித்த தாய் மேலும் கூறியுள்ளார்.


எனவே, குழந்தையை பயமுறுத்துவதற்காக, காவல்துறை அவசர அழைப்பு இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.


பின்னர், குறித்த இரு காவல்துறை அதிகாரிகளும், அவரைக் கடுமையாக எச்சரித்துவிட்டு, மீளவும் காவல்துறை நிலையத்துக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.