05 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!!

 


 


லங்கா சதொச 5 அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. இன்று 14-12-2022 ம் திகதி அமுலுக்கு வரும் வகையில் இந்த முடிவினை வெளியிட்டுள்ளது. 


அதன் அடிப்படையில், 


* கோதுவை மா கிலோ ஒன்றுக்கு 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 250 ரூபாவாகும்.


* ஒரு கிலோ பருப்பு 4 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 385 ரூபாவாகும்.


மேலும் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும்


* டின் மீனின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன்  இதன் புதிய விலை 490 ரூபாயாகும்.


* ஒரு கிலோ வௌ்ளைப்பூண்டின் விலை 35 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 460 ரூபாவாகும்.


* ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 9 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.அதன் புதிய விலை 190 ரூபாவாகும்.


இதேவேளை, அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அடுத்து வரும் வாரத்தில் மேலும் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.