விசா கட்டணத்தில் மாற்றம்!!

 


இரட்டை குடியுரிமைக்கான விண்ணப்பம் உள்ளிட்ட பல பிரிவுகளுக்கான விசா கட்டணம் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதன்படி, இரட்டை குடியுரிமையை வழங்குவற்கான கட்டணம் மூன்று இலட்சத்து 45 ஆயிரம் ரூபாவில் இருந்து இரண்டாயிரம் அமெரிக்க டொலர்களாக திருத்தப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


இந்நிலையில் குடியுரிமை சட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தாட்சி பத்திரங்களின் பிரதிகளுக்கான கட்டணம் 1,150 ரூபாவில் இருந்து 2000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


இதுதவிர, மேலும் சில பிரிவுகளுக்கான விசா கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.