மகவைக் காண வந்த குடும்பஸ்தர் பலி!!
நேற்றைய தினம் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி, யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
பிரான்சிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த சண்முகலிங்கம் பிரகாஸ் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிளுடன் பிறிதொரு மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே விபத்து நேர்ந்துள்ளது.
சாவகச்சேரியை பிறப்பிடமாக கொண்ட இவர், ஒரு வருடத்திற்கு முன்னர் இங்கு திருமணம் முடித்து பிரான்சிற்குச் சென்றுள்ள நிலையில் அவருடைய மனைவி பிரான்ஸ் செல்ல முடியாத காரணத்தால் இங்கு வசித்து வந்துள்ளார்.
தற்போது அவரது மனைவி பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவர் மனைவி மற்றும் மகவைப் பார்ப்பதற்காக இங்கு வந்தபோதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தினால் உறவுகள் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை