தாதிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர்!!

 


பஸ்ஸுக்குள் கடற்படை தாதி ஒருவரின் உடலில் சாய்ந்து துன்புறுத்திய சந்தேகத்தில் வைத்தியர் ஒருவரை கைது செய்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட கமரா பொருத்தப்பட்ட கையடக்கத் தொலைபேசி மூலம் வைத்தியர் தாதியை வீடியோ எடுத்துள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டதாக பிரதேசத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட 34 வயதுடைய சந்தேக நபர் மேல் மாகாணத்தில் உள்ள போதனா வைத்தியசாலை ஒன்றில் பணிபுரிபவராவார்.

  பாதிக்கப்பட்ட தாதி இது குறித்து பயணிகளுக்கு தெரிவித்ததையடுத்து, பயணிகள் குழுவொன்று வைத்தியரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளது.

சந்தேக நபர் மதுபோதையில் இருந்தமை தெரிய வந்ததையடுத்து, கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வைத்தியர் முன்னிலையில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டார் .

இதன் போது அவர் மதுபோதையில் இருந்தமை மருத்துவ அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இந்தச் சம்பவம் தொடர்பில் கடற்படை தாதியும் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.