கண்ணாடி விற்பனையகத்தில் போதைப்பொருள் விற்பனை!!

 


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மூக்கு கண்ணாடி கடையின் உரிமையாளர் 100 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்டவர், 35 வயதானவர் எனவும் குருநகரைச் சேர்ந்த பிரபல போதைப்பொருள் வர்த்தகர் ஒருவரது போதைப்பொருள்,  விற்பனைக்காக மூக்கு கண்ணாடி கடையில் தயார் செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் குருநகர் போதைப்பொருள் வியாபாரி தற்போது தலைமறைவாகியுள்ளார்.

யாழில் அண்மைக் காலமாக போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதுடன், இதனால் உயிரிழப்புக்களும் பதிவாகி வருகின்றமை மக்கள் மத்தியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்விடயம் குறித்து உரிய தரப்பினர் அக்கறை கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.