போதைப்பொருள் வியாபாரத்தால் கடத்தப்பட்ட 10 வயதுச் சிறுவன் - எங்கே போகிறது இலங்கை!!

 


 


நீர்கொழும்பில், போதைப்பொருளுக்கான பணத்தைச்  செலுத்தவில்லை என்பதற்காக  10 வயது சிறுவன்  கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 


நீர்கொழும்பில் உள்ள வர்த்தகர் ஒருவரின் புதல்வர் கிராண்ட்பாஸ் பகுதியிலுள்ள பெண் ஒருவரிடம் போதைப்பொருள் வியாபாரம் செய்துள்ள நிலையில் அவர் பணம் செலுத்தத்  தாமதமானதன்  காரணத்தால் குறித்த பெண், வர்த்தகரின் 10 வயதான பேரனை கடத்திச் சென்று, கிராண்ட்பாஸ் ரந்திய உயன பகுதியிலுள்ள வீடமைப்பு தொகுதியில் தடுத்து வைத்துள்ளார்.


அத்துடன், வர்த்தகரை தொடர்புக் கொண்டு அவரது மகன் பெற்றுக் கொண்ட போதைப்பொருளுக்கான பணத்தை செலுத்துமாறு குறித்த பெண் கோரியுள்ளார்.


இதன்போது, கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவல்களுக்கமைய, காவல்துறை விசேட அதிரடிப்படையினர் குறித்த சிறுவன் தடுத்து வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு சென்று சிறுவனை பாதுகாப்பாக மீட்டதுடன் குறித்த பெண்ணையும் கைது செய்துள்ளனர். 



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.