இந்த கோலத்தை பூஜை அறையில் வரைந்தால் கோடீஸ்வரராகலாம்!!
எந்திரங்களில் உயர்ந்த எந்திரமாக கருதப்படும் இந்த சக்கரம், பூஜை அறையில் வரைந்து வைத்து வழிபட்டு வந்தால், வீட்டில் இருக்கும் மகாலட்சுமி வெளியில் போக மறுப்பாள் என்கிறது ஆன்மீகம்.
அப்படியான ஒரு எளிய சக்கர வழிபாடு பற்றிய ஆன்மீக குறிப்பு தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள போகிறோம். சக்கரங்களில் சிறந்த ‘சக்கரம் ஸ்ரீ’ சக்கரம்.
ஸ்ரீ சக்கரம் என்பது தலையாய எந்திரம் ஆக ஆன்மீகம் குறிப்பிடுகிறது. வீட்டில் எந்திர வழிபாடு செய்து வருவது இறை சக்தியை அதிகரிக்க செய்யும் ஒரு எளிய பரிகாரமாக இருந்து வருகிறது.
இந்த ஸ்ரீ சக்கரம் ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட ஒன்றாகும். மிகுந்த சக்தி வாய்ந்த இந்த ஸ்ரீ சக்கரம் மகா சக்தியை நமக்கு கொடுப்பதாக தேவி புராணம் கூறுகிறது. ஸ்ரீ சக்கர எந்திரம் வீட்டில் வைத்திருப்பது எவ்வளவு நன்மைகளை கொடுக்குமோ, அதே அளவிற்கு நன்மைகள் அதை கோலமாக வரைவதன் மூலமும் நமக்கு கிடைக்கிறது.
எனவே எந்திரம் இல்லை என்று இனி கவலைப்பட வேண்டாம். ஸ்ரீ சக்கரத்தை சாக்பீசில் பூஜை அறையில் முறையாக அழகாக வரைந்து வைத்துக் கொள்ளுங்கள். அதை சுற்றிலும் காவியினால் கவசம் போல பார்டர் வரைந்து வைத்துக் கொள்ளுங்கள்.
பார்டரை சுற்றிலும் பூக்களால் அலங்கரித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் ஸ்ரீ சக்கரத்திற்கு மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும். ஸ்ரீ சக்கரம் அழிந்து விட்டால் மீண்டும் அதை வரையுங்கள்.
அன்னையின் பரிபூரண அருளை கொடுக்கக்கூடிய இந்த ஸ்ரீ சக்கரம் முன்பு சிறிய கலசம் ஒன்று வைத்து தண்ணீரை நிரப்பிக் கொள்ளுங்கள். அதில் சிறிதளவு மஞ்சளும், துளசி இலைகளும், கற்பூரம் அல்லது பச்சை கற்பூரத்தை நொறுக்கி சேருங்கள்.
புனித இந்த தீர்த்தத்தை பூஜை முடிந்ததும் வீடு முழுக்க இருக்கும் எல்லா மூலைகளிலும் தெளிக்க வேண்டும். நீங்கள் கடை வைத்திருந்தால் கடைகளில் கூட இந்த ஸ்ரீ சக்கரத்தை வரைந்து இவ்வாறு வழிபாடு செய்யலாம.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை