வாய்த்தகராறு கொலையில் முடிந்தது!!

 


கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் நேற்று (ஜன 03) பெண் ஒருவர் மண்வெட்டியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கஹட்டகஸ்திகிலிய, ஈதல்வெடுவனவெவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பெண் ஒருவர் மண்வெட்டியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக 119 எனும் பொலிஸ் அவசர தொலைபேசி அழைப்புக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உயிரிழந்த பெண் தன்னுடைய வயலில் நீர் பாய்ச்சுவதற்கு முயன்ற போது பெண்ணின் உறவினருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மண்வெட்டியால் தாக்கி கொல்லப்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன்போது குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் 31 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.