வேலைக்காக பச்சிளங் குழந்தையைக் கொன்ற பெற்றோர்!!

 


அரசாங்க வேலையை தக்க வைத்துக்கொள்வதற்காக, 6 மாத குழந்தையை கால்வாயில் எறிந்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த துயர சம்பவம் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்தேறியுள்ளது. ராஜஸ்தானின் பில்கானேர் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கணவனும் , மனைவியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து மேலும் தெரிய்வருகையில்,

மேற்படி பெண் குழந்தை 36 வயதான ஜவஹர்லால் மேக்வால், கீதா தேவி ஆகியோரின் 3 ஆவது பிள்ளையாகும்.

ராஜஸ்தான் மாநில அரசாங்க கொள்கையின்படி, அரச ஊழியர்கள் 2 பிள்ளைகளை மாத்திரமே பெற முடியும். 3 ஆவது பிள்ளை பிறந்தபின் அரச பணியிலிருந்து கட்டாயமாக ஓய்வு பெற வேண்டும்.

இந்நிலையில், தனக்கு ஏற்கெனவே இரு பிள்ளைகள் உள்ள நிலையில், 3 ஆவது குழந்தை பிறந்ததால் அரசாங்கத் தொழிலை இழக்க நேரிடும் என ஜவஹர்லால் மேக்வால் அச்சமடைந்தாராம். இதனால், அவர் மேற்படி பெண் குழந்தையை கால்வாயில் வீசி கொலை செய்துள்ளதாக கூறப்படுகின்றது.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.