எட்டாத இலக்கு - கவிதை!!

 


இலட்சியத்தோடு நகர்ந்த

வாழ்நாட்கள்....

திரும்பிப் பார்த்து

கேலி செய்கின்றன

எதை அடைந்தாய்??

என்று....


உண்மையில்

போராட்டங்களும்...

தோல்விகளும்....

ஏதோவொரு பாடத்தைக்

கற்றுத்தந்தாலும்......

இலக்கு என்பது

எட்டப்படுகின்றதா???


இல்லை.....


இளமை தொட்டு

முதுமை வரைக்கும்

ஓடிக்கொண்டு தான்

இருக்கின்றோம்......

கிடைத்ததை விட்டு

எட்டாத இலக்கை

நோக்கி.....


பா. சுபாஜினி

30.01.2023

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.