வெற்றிலை சப்பியபடி கடமையில் ஈடுபட்ட பொலிஸ அதிகாரி மீது ஒழுக்காற்று நடவடிக்கை!!

  


இன்றைய தினம் (17-01-2023)  யாழ். பொலிஸ் நிலைய நுழைவாயிலில் காலைக் கடமையில் ஈடுபட்ட தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வாயில் வெற்றிலை சப்பிடியபடி பொலிஸ் நிலையத்திற்கு வருபவர்களுடன் அடாவடித்தனமாகச் செயற்பட்டுள்ளார்.


யாழ்ப்பாணம்  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு   இவ்விடயம்    தொக உடனடியாகத் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் வெற்றிலை சப்பியபடி கடமையில் ஈடுபட்ட தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரை கடமையில் இருந்து அகற்றி உடனடியாக ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் நிலைய நிர்வாக அதிகாரிக்குப் பணிப்புரை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.