இளவரசர் ஆண்ட்ரூ பக்கிங்காம் அரண்மனையிலிருந்து வெளியேற்றம்!!

 


பக்கிங்காம் அரண்மனையிலிருந்து தனது தம்பியாகிய இளவரசர் ஆண்ட்ரூவை மன்னர் சார்லஸ் வெளியேற்றியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 


மன்னர் சார்லஸ், தனது தம்பியாகிய இளவரசர் ஆண்ட்ரூவை பக்கிங்காம் அரண்மனையிலிருந்து வெளியேற்றியுள்ளதாகவும், இனி அவர் ராஜ குடும்பத்துக்குள் வரவேற்கப்படமாட்டார் என்றும் செய்திகள் வெளியாகிவருகின்றன.


இனி இளவரசர் ஆண்ட்ரூ மூத்த ராஜ குடும்ப உறுப்பினர் அல்ல என்றும், அரண்மனைக்குள் அதிகாரப்பூர்வ அலுவலகம் எதையும் பயன்படுத்த அவருக்கு இனி அதிகாரம் இல்லை என்றும் அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.


வயது வராத இளம்பெண் ஒருவருடன் பாலுறவு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து இளவரசர் ஆண்ட்ரூவின் பட்டங்கள் பறிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.அத்துடன், அவர் வகித்துவந்த Colonel of the Grenadier Guards என்னும் பட்டமும் அவரிடமிருந்து பறிக்கப்பட்டு ராணி கமீலாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.