காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஜனாதிபதியின் உறுதிமொழி!!

 


யாழ்ப்பாணத்தில் இன்று தேசிய பொங்கல் தின நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தலைமையில் ஆரம்பமாகி இடம்பெற்றது.

இந்நிலையில் அங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்த நாட்டிலே ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் நாடாளுமன்றில் உள்ள அனைத்து தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனை தொடர்பில் அந்த காணாமல் ஆக்கப்பட்டதற்கு என்ன நடந்தது என்பதன் உண்மை தன்மையை கண்டறிய வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும் அதற்குரிய வேலை திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.

மேலும், காணாமல் போன உறவுகளுக்கு பரிகாரம் வழங்கும் பொருட்டு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை நிறுவ தீர்மானித்துள்ளோம். குறிப்பாக என்ன நடந்தது யார் யார் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பது பற்றி ஆராயவே இதனை மேற்கொண்டுள்ளோம்.

அதேவேளை பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டத்தை கொண்டுவரவுள்ளோம். யாழில் காணிகளை மீள பெற்றுக்கொடுப்பது தொடர்பில் கலந்துரையாட இருக்கின்றோம்.

யுத்த காலத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக பாதுகாப்பு தரப்பினர் தம்வசப்படுத்திய காணிகளில் மக்களுக்கு கொடுப்பதற்கு மீதமாக 3000 ஏக்கரே மீதமாக இருக்கின்றது.

அதிலே இன்னொரு பகுதியை வழங்குவதற்கு பாதுகாப்பு தரப்பினர் விருப்பம் தெரிவித்துள்ளனர். அது தொடர்பிலும் இன்று கலந்துரையாடுவோம் எனவும் தெரிவித்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colomboகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.