அரசியல் கைதிகள் விடுதலை!!

 


எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி தமிழ் அரசியல் கைதிகள் மூவர் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், முன்னாள் அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரனின் கொலைக் குற்றவாளியை விடுவிக்கும் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.

மகேஸ்வரன், 2008 ஜனவரி 1ஆம் திகதியன்று கொழும்பின் இந்துக் கோவில் ஒன்றுக்குள் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதேவேளை, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவைக் கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காகத் தண்டனை பெற்றவரும் விடுவிக்கப்பட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தாக்குதலாளியை விடுவிக்க விரும்புவதாக பொன்சேகா நாடாளுமன்றத்தில் அறிவித்த போதிலும், அவரது கையொப்பமிடப்பட்ட ஒப்புதல் பெறப்படவில்லை.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் இன்னும் அவரிடம் கலந்தாலோசிக்கவில்லை என பொன்சேகாவின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.