இலங்கையர்களுக்கு அமெரிக்காவில் வேலை வாய்ப்பு!!

 


அமெரிக்காவில் இலங்கையர்களுக்கு 550 வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன.

அமெரிக்காவில் உள்ள இலங்கைத் தூதரகமும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனமும் இணைந்து, இந்த வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளவுள்ளன.


இதன்படி, 250 தாதியர்கள், 100 ஆய்வக தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் 200 தாதி உதவியாளர்களுக்கு அங்கு தொழில் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வேலை வாய்ப்புகளுக்கான ஆட்சேர்ப்பை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் உள்நாட்டில் நடத்தும் என்று அந்த அறிவித்தலில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.