இலங்கையில் ஏற்படவுள்ள அபாயம்!!

 


மீண்டும் இலங்கையில் நீண்ட மின்வெட்டு மற்றும் நீண்ட எரிபொருள் வரிசைகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளது தகவல் வெளியாகியுள்ளது. 

இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்டுள்ள கட்டணங்கள் அதிகரிக்கப்படாவிட்டால் மின்வெட்டை நிச்சயமாக நீடிக்க நேரிடும் எனவும் 

 நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்குத் தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கு டொலர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் நிலைமை மேலும் மோசமாக்கியுள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.

பெட்ரோலியம் கூட்டுத்தாபனத்திடம் எரிபொருளை இறக்குமதி செய்வதற்குத் தேவையான டொலர்களை இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார் அவர்,  மேலும் மின் உற்பத்திக்காக வாரியம் பெற்ற எரிபொருளைச் செலுத்தாவிட்டால், மீண்டும் நாடு முழுவதும் எரிபொருள் வரிசைகள் உருவாகும் நிலை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.